டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

கேழ்வரகு வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று (மே 3) முதல் தொடங்கப்படுகிறது.

மக்களை தேடி மேயர்!

மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதற்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பொதுமக்களிடம் இன்று கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

சித்திரை திருவிழா தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

கேதார்நாத் புனித பயணம்!

மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் புனித யாத்திரை பதிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை!

மே 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள மும்பை, சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 347-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

என்.எல்.சி விவகாரம்: அமைச்சர்களை கடுமையாக சாடிய அன்புமணி

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் கபாப்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *