திமுக கூட்டம்!
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று (மே 21)காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
ஆளுநரை சந்திக்கும் பாஜக குழு!
கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் இன்று பாஜக மகளிர் நிர்வாகிகள் மனு கொடுக்க உள்ளனர்.
ராஜீவ் காந்தி நினைவு தினம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஏற்காட்டில் கோடை விழா!
மலைகளின் அரசனான ஏற்காட்டில் இன்று 46வது கோடை விழா தொடங்குகிறது.
தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல்
சென்னை பெசன்ட் நகரில் இன்று மாலை தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நடைபெற உள்ளது.
கடற்கரை தூய்மை!
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழக அரசு சாா்பில் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இன்று பெசண்ட் நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 364ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தேயிலை தினம்!
இன்று உலகம் முழுவதும் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
ஐபிஎல் போட்டி!
இன்று மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதல் அமைச்சரவை கூட்டம்: நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?
தொடர்ந்து ப்ளே ஆஃப் செல்வது எப்படி?தோனி சொன்ன ரகசியம்!