டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ராகுல் வழக்கு!

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மே 2) விசாரணைக்கு வருகிறது.

அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிடுகிறார்.

பூங்கா திறப்பு!

சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று திறந்திருக்கும்.

மதுரை சித்திரை திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 346-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குஜராத், டெல்லி மோதல்!

இன்றைய ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செல்வ மலை அம்மே !

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் யார் யார்?-முழு விவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *