டாப் 10 செய்திகள் : மோடி வேட்புமனு தாக்கல் முதல் பிளஸ் 1 ரிசல்ட் வரை!

Published On:

| By Kavi

பிளஸ் 1 ரிசல்ட்!

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடந்தது.  இந்த தேர்வை 8.16 லட்சம் பேர் எழுதிய நிலையில் இன்று (மே 14) முடிவுகள் வெளியாகிறது.

மோடி வேட்புமனு தாக்கல்!

பிரதமர் மோடி 2014, 2019 தேர்தலை தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார். ஜூன் 1 ஆம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று திறக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு  கோயில் நடை சாத்தப்படும்.

நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை எம்.பியும், திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

வானிலை நிலவரம்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரு நாள்கள் இன்று (மே. 14) மற்றும் நாளை (மே. 15) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

வேலூருக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி சிரசு திருவிழா நடைபெறும்.. அதன்படி, இன்று சிரசு ஊர்வலம் நடை பெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கள்வன் ஓடிடி!

ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் வெளியான கள்வன் திரைப்படம் இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ரயில்கள் நிறுத்தம்!
சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் இருக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று இரவு 9.55 முதல் நாளை (மே 15) அதிகாலை 1.55 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இன்று கடற்கரையிலிருந்து இரவு 8.35, 10.05 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

பெட்ரோல் விலை 59 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: காமராஜர் ஆட்சி… செல்வப் பெருந்தகை டூர்…  காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம்!

சென்னை, பெங்களூரு 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் செல்லலாமா? எப்படி?

கருடன்: சூரி ஆக்சன் மிரட்டல்… ரிலீஸ் தேதி இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel