உதய்பூர் ரயில் நிலையம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (மே 10) அடிக்கல் நாட்டுகிறார்.
கர்நாடகா தேர்தல்!
கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம் திறப்பு!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம், திருச்சி மாரியம்மன் கோவில் பக்தர்கள் வரிசை வளாகம், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் திருமண மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
காவல் சார்பு ஆய்வாளர்!
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்விற்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.
கேப்டர் மில்லர் அப்டேட்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
தீராக்காதல் டிரைலர்!
ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் தீராக்காதல் டிரைலர் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவனையில் 869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, டெல்லி மோதல்!
இன்று நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதுகின்றன.
CSKvsDC : சென்னையில் நாளை எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்??