டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை!

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் நான்கு நாள் அரசுமுறை பயணமாக இன்று (மார்ச் 8) இந்தியா வருகிறார்.

திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

திரிபுரா மாநில முதல்வராக பாஜக தலைவர் மாணிக் சாஹா இன்று பதவியேற்கிறார்.

மகளிர் தின விடுமுறை!

தெலங்கானா மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அரசு பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை!

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பாமக பொதுக்கூட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று நடைபெறும் பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார்.

முந்திரிக்காடு முன்னோட்டம்!

களஞ்சியம் இயக்கத்தில் உருவாகியுள்ள முந்திரிக்காடு திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 291-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு அணிகள் மோதல்!

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

காத்திருந்த அழகிரி, வராத ஸ்டாலின்: ’மதுரை சம்பவம்’ நடக்காதது ஏன்?

எடப்பாடி உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது: அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share