டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

புதிய மாநகராட்சி கட்டடம் திறப்பு!

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 7)திறந்து வைக்கிறார்.

ஆளுநர் உதகை பயணம்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்கிறார்.

பாஜக செய்தி தொடர்பாளர் ஜாமீன் மனு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பாமக மகளிர் கூட்டம்!

சென்னையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

போட்டித் தேர்வு வகுப்புகள்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா வகுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கி வைக்கிறார்.

தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்!

ஆதிக்குடிகளை இழிவுபடுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைக்கும் சனாதான கும்பலை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழா!

ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய நான்கு வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 290-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொருநை புத்தக திருவிழா!

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொருநை புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

பெண்கள் பிரிமியர் லீக்!

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், உபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

விரைவில்  காரைக்கால் – இலங்கை கப்பல் போக்குவரத்து!

கிச்சன் கீர்த்தனா: நண்டு பிரட்டல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.