தோள் சீலை போராட்டம் பொதுக்கூட்டம்!
தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 6) நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிராக் பஸ்வான் தமிழகம் வருகை!
நாடாளுமன்ற உறுப்பினரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் இன்று தமிழகத்திற்கு வருகை தந்து பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்கிறார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மனு அளிக்கிறார்.
நீட் தேர்வு விண்ணப்பம்!
இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
மாசிமக திருவிழா!
கும்பகோணம் மாசிமக திருவிழா இன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கண்ணே நம்பாதே பாடல்!
மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படத்தின் குரு குரு பாடல் இன்று வெளியாகிறது.
சிஐடியு போராட்டம்!
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.
மாசி தேரோட்டம்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
NTR 30 அப்டேட்!
கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் NTR 30 படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 289-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண்கள் பிரிமியர் லீக் போட்டி!
பெண்கள் டி20 பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: சுறா மீன் புட்டு!
மாநில அரசியலே தெரியாது… இதில் தேசிய அரசியல்?: ஸ்டாலினை கிண்டல் செய்த எடப்பாடி