டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

முதல்வர் மதுரை பயணம்!

மதுரை மாவட்டத்தில் இன்று (மார்ச் 5) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அதிமுக பொதுக்கூட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிசான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

70 இணையர்களுக்கு திருமணம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 70 இணையர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைக்கிறார்.

ஹோலி சிறப்பு ரயில்!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூரிலிருந்து பாட்னாவிற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பகவதி அம்மன் மாசி திருவிழா!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 288-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெண்கள் பிரிமியர் லீக்!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் உபி வாரியர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

பத்துதல படத்தில் சிம்பு கொடுத்த ’பஞ்ச்’ பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel