வாச்சாத்தி வழக்கு விசாரணை!
வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் இன்று (மார்ச் 4) நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.
இளைஞர் உத்சவா நிகழ்சி!
பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் உத்சவா இந்தியா நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் வியாபாரம் செய்து வந்த தெருவோரக் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார தினம்!
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி பாலம் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் புனரமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக இன்று திறக்கப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ்
காஞ்சிபுரம் ஆதி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்குகிறார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!
குடிநீரில் மலம் கலந்த வேங்கை வயல் கிராமத்தில் இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.
குஜராத் – மும்பை மோதல்!
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கள்வன் பட பாடல் வெளியீடு!
பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் படத்தின் அடி கட்டழகு கருவாச்சி பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 287-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’
எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகி: ஓபிஎஸ் காட்டம்!