முகுல் வாஸ்னிக் பத்திரிகையாளர் சந்திப்பு!
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று(மார்ச் 31) சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை!
தமிழக சட்டமன்றத்தில் இன்று உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.
ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று விசாரணை!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
டிடிவி தினகரன் ஆலோசனை!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
விடுதலை திரைப்படம் ரிலீஸ்!
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்!
இன்று அகமதாபாத்தில் துவங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 314-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 123பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 608பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சகுந்தலம் பாடல் வெளியீடு!
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த சகுந்தலம் படத்தின் மல்லிகா பாடல் வீடியோ இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம்!