டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 30) விசாரணைக்கு வருகிறது.

அமமுக ஆலோசனை கூட்டம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று‌ நடைபெறுகிறது.

கியூட் தேர்வு விண்ணப்பம்!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

ரோப் கார் சேவை நிறுத்தம்!

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.

பத்து தல ரிலீஸ்!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த பத்து தல படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 313-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நமீபியா, ஜெர்சி மோதல்!

நமீபியா, ஜெர்சி அணிகள் மோதும் பிளே ஆஃப் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 112பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 689பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

”கட்டிங் பிளேடு வைத்து பல்லைப் பிடுங்கினார்”- சஸ்பெண்ட் ஏஎஸ்பி மீது சரமாரி புகார்கள்!

வாலி குறித்து திடீரென உருகிய வைரமுத்து: பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *