டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

குவாட் அமைச்சர்கள் கூட்டம்!

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் கூட்டம் இன்று (மார்ச் 3) டெல்லியில் நடைபெறுகிறது.

தொழில் கண்காட்சி!

MSME Connect 2023: தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் இன்று துவங்குகிறது.

சரவணா ஸ்டோர் வழக்கு!

மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர் தற்காலிகமாக செயல்பட தடை விதிக்கக்கோரி மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அய்யா வைகுண்டர் வாகன பவனி!

அய்யா வைகுண்டர் 191-வது வாகன பவனி திருவனந்தபுரத்திலிருந்து இன்று புறப்பட்டு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

பத்து தல டீசர்!

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

அந்தோணியார் திருவிழா!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்று துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 286-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தி லெஜண்ட் ஓடிடி ரிலீஸ்!

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

ஈரோடு கிழக்கு ஃபார்முலா ஒரு ஜனநாயக படுகொலை: எடப்பாடி அதிருப்தி

உக்ரைனிலேயே சித்ரவதை முகாம்கள் அமைத்த ரஷ்யா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.