டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்த மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 28) திறந்து வைக்கிறார்.

அதிமுக வழக்கில் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு துறையில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஜி20 கூட்டம்!

மும்பையில் இன்று ஜி20 வர்த்தகம் மற்றும் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.

சிபிஐ போராட்டம்!

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது.

இன்னொசென்ட் உடல் நல்லடக்கம்!

கேரள நகைச்சுவை நடிகர் இன்னொசென்ட் உடல் இன்று அவரது சொந்தஊரான இரிஞ்சலகுடாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கல்வி அலுவலர்கள் கூட்டம்!

12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து விவாதிக்க‌ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 311-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை, நியூசிலாந்து மோதல்!

இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 102பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 634பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!

”அண்ணாமலை ஏன் இப்படி?”  வானதியிடம் குமுறிய எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0