டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பட்ஜெட் விவாதம்!

தமிழக பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் பொது விவாதம் இன்று (மார்ச் 27) சட்டமன்றத்தில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் உள்ளிருப்பு போராட்டம்!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!

சென்னை மாநகராட்சியின் 2023-24-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார்.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.

ஆகஸ்ட் 16 1947 இசை வெளியீட்டு விழா!

பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெறுகிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

மலக்குழி விஷவாயு மரணங்களை தடுத்திட அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்று சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பங்குனி உத்திர திருவிழா!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 310-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் வெஜிடபுள் பிரியாணி!

அதிமுக – பாஜக கூட்டணி : எல்.முருகன் விளக்கம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *