டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் இன்று (மார்ச் 26) நாட்டு மக்களுடன் உரையாடுகிறார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ராகுல்காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காந்தி சிலை முன்பாக சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்துகின்றனர்.

எல்.வி.எம். ராக்கெட்!

36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

மகளிர் பிரிமியர் லீக் இறுதி போட்டி!

மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு இன்று பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல்!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று சார்ஜாவில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 309-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான் இரவில் தூங்காததற்கு காரணம் லியோனி தான் – ஸ்டாலின்

மீண்டும் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: வைரல் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.