டான்செட் நுழைவுத்தேர்வு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளுக்கான டான்செட் பொதுநுழைவுத் தேர்வு இன்று (மார்ச் 25) துவங்குகிறது.
பாமக ஆலோசனை கூட்டம்!
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை தடுத்தல், சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பண்ருட்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ராவடி பாடல் ரிலீஸ்!
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தின் ராவடி பாடல் இன்று வெளியாகிறது.
ஆணவ குற்றங்கள் கலந்தாய்வு கூட்டம்!
ஆணவ கொலைகளை தடுப்பதற்காக எவிடென்ஸ் கதிர் தலைமையில் ஆவண குற்றங்கள் தடுப்பு வரைவு கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் புத்தக கண்காட்சி!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
இலங்கை, நியூசிலாந்து மோதல்!
இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பரணி கொடை விழா!
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று பரணி கொடை விழா நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 308-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 549 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.