டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) ஆன்லைன்‌ ரம்மி தடைசட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில் டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சசிகலா வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவர்கள் போராட்டம்!

ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக்கோரி அரசு மருத்துவர்கள் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Raid டீசர்!

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் Raid திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிம்பாப்வே, நெதர்லாந்து மோதல்!

ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 306-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்களில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மரபணு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் முக்கிய அறிவுரை!

கிச்சன் கீர்த்தனா: பனீர் பாயசம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *