டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வேளாண் பட்ஜெட் தாக்கல்!

2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

டிடிவி தினகரன் ஆலோசனை!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்‌.

ஆகஸ்ட் 16,1947 படம் டிரெய்லர் வெளியீடு!

பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

கருவலூர் மாரியம்மன் திருவிழா!

திருப்பூர் கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக காடுகள் தினம்!

காடுகளின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் இன்று உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெண்கள் பிரிமியர் லீக் போட்டி!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் உபி வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 304-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“மகளிருக்கு ஆயிரம்…வெத நான் போட்டது”: கமல்

‘விடுதலை’ ரிலீஸ் தேதி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *