டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (மார்ச் 20) இந்தியா வருகிறார்.

தமிழக பட்ஜெட் தாக்கல்!

2023-24-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

பாரதிய கிசான் மோர்ச்சா கூட்டம்!

டெல்லியில் இன்று பாரதிய கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பில் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது.

அண்ணா நகர் டவர் பூங்கா திறப்பு!

12 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா நகர் டவர் பூங்கா புனரமைக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீடு!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அக நக பாடல் இன்று வெளியாகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பண்ணாரி அம்மன் குண்டம் விழா!

ஈரோடு பன்னாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 303-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெண்கள் பிரிமியர் லீக் போட்டி!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ், உபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து தொடங்கிய புதிய முயற்சி: ஜே.பி.நட்டா பெருமிதம்

IND vs AUS 2nd ODI: இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel