வாக்கு எண்ணிக்கை!
நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று (மார்ச் 2) தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இத்தாலி பிரதமர் இந்தியா வருகை!
இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இன்று இந்தியா வருகிறார்.
பட்ஜெட் ஆலோசனை!
வரும் மார்ச் 20 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
லைகா அப்டேட்!
லைகா நிறுவனம் இன்று காலை 10.30 மணிக்கு அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிடுகிறது.
பள்ளிகள் விடுமுறை!
மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விஐடி கலைத் திருவிழா!
சென்னை விஐடி-யில் தேசிய அளவிலான கலை திருவிழா இன்று முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 285-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்!
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ள விழா குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாசி தெப்ப உற்சவம்!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று மாசி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்