டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

கலைஞர் ஸ்டாண்ட் திறப்பு விழா!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் போராட்டம்!

பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்கள் பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வழக்கு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கண்ணை நம்பாதே ரிலீஸ்!

மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சவப்பெட்டிகளுடன் போராட்டம்!

20 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநரை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையில் சவப்பெட்டிகளுடன் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

பிச்சைக்காரன் Bikili பாடல்!

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் Bikili பாடல் இன்று வெளியாகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 300-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

கிச்சன் கீர்த்தனா: கம்பு – பாலக் கீரை வடாகம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *