டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

அதானி குழும முறைகேடுகள் குறித்து இன்று(மார்ச் 15) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 18எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அமமுக 6-ஆம் ஆண்டு துவக்க விழா!

இன்று அமமுக 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடியேற்றுகிறார்.

நாம் தமிழர் பேரணி!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்ககோரி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை 9.30மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கி கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

#Let Kashmir Speak ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட காஷ்மீரை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் இன்று #LetKashmirSpeak என்ற தலைப்பில் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

உலக குத்துச்சண்டை போட்டி!

74நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று டெல்லியில் துவங்குகிறது.

G20 கல்வி செயற்குழு கூட்டம்!

G20 2-வது கல்வி செயற்குழு கூட்டம் இன்று‌ அமிர்தசரஸில் தொடங்குகிறது .

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 298-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 40பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 257பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று உபி வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா:சாமை-கறிவேப்பிலை வற்றல்

’ஈ சாலா கப் நம்தே’: மந்தனாவின் ஆர்.சி.பி.அணிக்கு காத்திருக்கும் கடைசி வாய்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.