டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று‌ (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழகம், புதுச்சேரியில் இன்று 8.75 லட்சம் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

ஜி20 கூட்டம்!

ஜி20 நாடுகளின் தலைமை தணிக்கை அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பணிக்குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்கார் விருது விழா!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் டால்பி தியேட்டரில் இன்று 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

புதுச்சேரி பட்ஜெட்!

புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அமமுக ஆலோசனை கூட்டம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் அக்கட்சி அலுவலகத்தில் இன்று பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 296-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

”நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைத்தார்”: பிரதமரை சாடிய காங்கிரஸ்!

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *