டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

பெங்களூரு – மைசூரு விரைவு சாலை!

ரூ.8,480 கோடியில் அமைக்கப்பட்ட பெங்களூரு – மைசூரு விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 12) நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

நீதிபதிகள் மாநாடு!

டெல்லியில் 11 நாடுகளின் நீதிபதிகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு தலைமை நீதிபதிகள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை – விஜயவாடா ரயில் ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை – விஜயவாடா செல்லும் ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

நீர், மோர் பந்தல்!

புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்படுகிறது.

சமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

சென்னை கோயம்பேட்டில் இன்று சமத்துவ மக்கள் கழக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

சங்கர் 7-ஆம் ஆண்டு நினைவேந்தல்!

உடுமலையில் இன்று சங்கர் சமூக நீதி அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பல்லவ உற்சவ திருவிழா!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பல்லவ உற்சவ திருவிழா நடைபெறுகிறது.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்!

பெண்கள் பிரிமியர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டி!

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 295-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இளம் ஹீரோயின் போல் சுஹாசினியின் போட்டோ ஷூட்!

அதிமுகவை அழிக்க போராடும் திமுகவின் ‘பி’ டீம் – எடப்பாடி ஆதங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel