டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வருக்கு பாராட்டு விழா!

கைத்தறி, விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை கருத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் இன்று (மார்ச் 11) பாராட்டு விழா நடைபெறுகிறது.

முதல்வர் பிறந்தநாள் வாழ்த்தரங்கம்!

முதல்வர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் வாழ்த்தரங்க நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

அதிமுக பொதுக்கூட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிவகங்கையில் இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அமமுக ஆலோசனை கூட்டம்!

கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

முழு அடைப்பு போராட்டம்!

NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

சாத்தனூர் அணை திறப்பு!

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் ஜீன் 8-ஆம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது .

நுழைவு தேர்வு ஹால் டிக்கெட்!

MBA, MCA படிப்புகளுக்கான TANCET, ME, M Tech, M Arch, M plan படிப்புகளுக்கான CEETA நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 194-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

”அன்று ஒரு கோடி, இன்று 25 லட்சம்” கைதான அதிமுக எம்.எல்.ஏ.காட்டம்! 

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *