பாஜக கட்சி அலுவலகம் திறப்பு!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மார்ச் 10) தமிழகத்தில் 10 மாவட்ட கட்சி அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவியேற்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
பாஜக போராட்டம்!
புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிறுதானிய உணவு திருவிழா!
செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் இன்றும் நாளையும் சிறுதானிய உணவு பெருவிழா நடைபெற உள்ளது.
நூல் திறனாய்வு!
சாதி, தலித்துகள், பெண்கள் நூல் திறனாய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக நிலையத்தில் இன்று நடைபெறுகிறது.
அகிலன் படம் ரிலீஸ்!
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 293-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்!
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹால் டிக்கெட் வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்புகள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செயது கொள்ளலாம்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
பாஜகவின் சிறை அரசியல்: வைரலாகும் மணீஷ் சிசோடியாவின் கடிதம்
டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி