முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர்.
செய்முறை தேர்வு!
தமிழகத்தில் பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது.
நாகலாந்தில் மறுவாக்குப்பதிவு!
தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகலாந்து மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்குகிறது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி!
சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இவ்விழாவை சென்னை புதுக்கல்லூரியில் காலை 10.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு
ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சொத்து வரி வசூல்!
சொத்து வரி செலுத்த மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று முதல் வரி வசூல் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநாகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 284வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கவ் மில்க்
பால் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிதாக ‘கவ் மில்க்’ என்ற பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது.
மழை அப்டேட்!
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.