டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை!

ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று (ஜூன் 5) விசாரணை மேற்கொள்கிறார்.

காயிதே மில்லத் பிறந்தநாள்!

காயிதே மில்லத் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளி வாசலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.

துணைவேந்தர்கள் மாநாடு!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று உதகையில் நடைபெறுகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழா!

திமுக மகளிரணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில்!

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புவனேஸ்வர் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினம்!

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பேணும் வகையில் உலகம் முழுவதும் இன்று‌ சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 380-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்டில்யா சொகுசு கப்பல்!

சென்னையிலிருந்து இன்று முதல் இலங்கைக்கு கார்டில்யா சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பெப்பர் பனீர்

பையா 2 படத்தில் கார்த்தி ? லிங்குசாமியின் அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0