கலைஞரின் கனவு இல்லம் – சிறப்பு முகாம்!
கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஜூன் 30) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
மனதின் குரல்!
பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-வது அத்தியாயம் இன்று ஒலிப்பரப்பாகவுள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற மோடி முதல் முறையாக மக்களுடன் உரையாற்றுகிறார்.
விடாமுயற்சி அப்டேட்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று அஜித் குமாரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
மழை அப்டேட்!
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகோள்கள் தினம்!
ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச சிறுகோள் தினம் ஜூன் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. சிறுகோள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நீட் மறு தேர்வு முடிவு!
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மறு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவு இன்று வெளியாகிறது.
இந்தியா வெற்றி!
பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 106வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கடைசி தேதி!
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு இன்று கடைசி நாள். இதில் சேர்வதற்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமைச் சேர்ந்த மாணவ மாணவிகள் புதுச்சேரி சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு!
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்றுடன் நிறைவு பெற்றதால் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: பிரியாணி… எப்போது, எப்படி, எந்தளவு சாப்பிடுவது நல்லது?
மேட்சை மாற்றிய அந்த கேட்ச்… டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து … நிதிஷ் குமார் தீர்மானம்!
“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா