டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மணிப்பூர் செல்லும் ராகுல்

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 29) சந்திக்கிறார்.

பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கடலூரில் இன்று நடைபெறும் பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகிறார்.

தக்காளி இன்றைய விலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.50-க்கும் சில்லறை விலையில் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை!

இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சந்திரமுகி 2 அப்டேட்!

வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.

மதுரை, திருச்சி மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி அணிகள் மோதுகின்றன.

மாமன்னன் ரிலீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 404-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆஸ்திரியா, ஜெர்மனி மோதல்!

நெதர்லாந்தில் இன்று நடைபெறும் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரியா, ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு: பாஜக அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி!

மாணவிகள் வாட்சப் டி.பி : மகளிர் ஆணைய தலைவி எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *