டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தக்காளி விலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜூன் 28) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் மண்வளம்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் தங்கள் மண் வளத்தை அறிந்து அதற்கேற்ப உரமிடும் வகையில் தமிழ் மண்வளம் என்ற புதிய இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரது உடல்நலனை பொறுத்து காணொலி காட்சி வாயிலாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு!

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையை அடுத்த பெருங்களத்தூரையும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையையும் இணைப்பதற்காக கட்டப்பட்ட மேம்பாலத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைக்கிறார்.

சேலம் பட்டமளிப்பு விழா!

சேலம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

பக்ரீத் சிறப்பு பேருந்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிங் ஆஃப் கோதா டீசர்!

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

திருப்பூர், திண்டுக்கல் அணிகள் மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 403-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை அடை

சூர்யவம்சம் 2: சூப்பர் அப்டேட் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்!