டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

வந்தே பாரத் ரயில் சேவை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 27) மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார்.

தொழில் நிறுவனங்கள் நாள்!

சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு!

அமலாக்கத்துறையால் சட்ட விரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உலக கோப்பை அட்டவணை!

அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகிறது.

நரசிம்ம பிரம்மோற்சவம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் இன்று நடைபெறுகிறது.

சேலம், கோவை மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேலம், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 402-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தெற்காசியா கால்பந்து போட்டி!

பெங்களூரில் இன்று நடைபெறும் தெற்காசியா கால்பந்து போட்டியில் இந்தியா, குவைத் அணிகள் மோதுகின்றன.

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிச்சன் கீர்த்தனா: காராமணிக் கொழுக்கட்டை

’பெரியாருக்கே’ கருப்பு தடையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment