டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

இந்திய உள்கட்டமைப்பு ஜி20 கூட்டம்!

இந்தியாவின் உள்கட்டமைப்பு, முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான ஜி20 கூட்டம் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் இன்று (ஜூன் 26) துவங்குகிறது.

முதல்வர் ஆலோசனை!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில் துறை சார்ந்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பொறியியல் தரவரிசை பட்டியல்!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

இளையபெருமாள் நூற்றாண்டு விழா!

விசிக சார்பில் கடலூர் காட்டுமன்னார் கோவிலில் இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது‌.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

சேப்பாக், மதுரை அணிகள் மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆனி திருமஞ்சன விழா!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 401-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகாரிகளின் இருக்கைகளில் நரிக்குறவர்கள்- அமைச்சர் மஸ்தான் செய்த மாஸ் சம்பவம்! 

கிச்சன் கீர்த்தனா: வரகரிசி – கற்கண்டுப் பொங்கல்

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *