ரத்த தான முகாம்!
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று (ஜூன் 25) ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
கொடியேற்று விழா!
கோவை சித்ரா பேருந்து நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று கொடியேற்று விழா நடைபெறுகிறது.
வானவில் பேரணி!
சென்னை எழும்பூர் முதல் LG சாலை சந்திப்பு வரை தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி இன்று நடைபெற உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்!
தேவேந்திர குல வேளாளர் மக்களை SC பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவாரூரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கோட்டை அகிலாண்டேஸ்வரி கும்பாபிஷேகம்!
வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஶ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
சைக்ளத்தான் விழிப்புணர்வு பேரணி!
எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சைக்ளத்தான் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிதம்பரம் தேரோட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
இன்றைய டிஎன்பிஎல் போட்டி!
இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 400-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.