டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

பிரதமர் மோடி எகிப்து பயணம்!

அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று (ஜூன் 24) எகிப்து நாட்டிற்கு பயணம் செல்கிறார்.

மருத்துவ முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நெய்தல் கோடை விழா!

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் இன்று நெய்தல் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அந்தோணியார் தேவாலய திருவிழா!

கோவை மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று நடைபெறுகிறது.

கண்டதை படிக்காதே டிரைலர் ரிலீஸ்!

ஜோதி முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்டதை படிக்காதே டிரைலரை இயக்குநர் சிம்புதேவன் இன்று வெளியிடுகிறார்.

நான் முதல்வன் திட்டம்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஈரோட்டில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, சேப்பாக் அணிகள் மோதல்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 399-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: தினை – ராகி டோக்ளா

எதிர்க்கட்சிகள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் கூறிய 7 ஆலோசனைகள்!