டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

நிதிநுட்ப நகர திட்டம்!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.370 கோடி மதிப்பீட்டில் சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப  கோபுரம் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 17) துவங்கி வைக்கிறார்.

கல்வி விருது விழா!

சென்னை நீலாங்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெறும் பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உரையாற்றுகிறார்.

நாம் தமிழர் கண்டன பொதுக்கூட்டம்!

கேரளாவிற்கு கனிம வளம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

காடப்புறா கலைக்குழு டிரெய்லர் வெளியீடு!

முனிஷ்காந்த், காளி வெங்கட் நடித்த காடப்புறா கலைக்குழு திரைப்படத்தின் டிரெய்லரை இன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிடுகிறார்.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்வி கண்காட்சி!

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இன்று கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 392-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா டெஸ்ட்!

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இங்கிலாந்து எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

கிச்சன் கீர்த்தனா: கிழங்கு கட்லெட்

செந்தில்பாலாஜியிடம் முதல்வர் அக்கறை காட்டுவது ஏன்? : சீமான் பதில்!

டிஜிட்டல் திண்ணை: சர்ஜரி… கஸ்டடி…  ஸ்டாலினுக்கு நெருக்கடி! 

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை காவல்: வழக்கறிஞர் சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share