நீட் தேர்வு முறைகேடு – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 பேர் 720-க்கு 720 பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
தலைமை செயலாளர் ஆலோசனை!
அரசு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்தும் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா இன்று முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் .
காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காமராஜர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. நாளை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்கவுள்ள நிலையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.
ஒடிசா முதல்வர் தேர்வு!
ஒடிசாவில் பாஜக ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு- காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
2024 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 87 வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
3 கோடி வீடுகள்!
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மிதமான மழை!
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் ஜூன் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதிகபட்ச வெப்ப நிலை!
ஜூன் 10ஆம் தேதி மதுரை, தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான நிலையில், அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!
டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!