டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil july 29 2023

மணிப்பூரில் இந்தியா கூட்டணி!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள ‘இந்தியா’ கூட்டணி இன்று மணிப்பூர் செல்கிறது. இந்தியா கூட்டணி குழு இன்றும் நாளையும் மணிப்பூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் மணிப்பூர் செல்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அகில இந்திய மாநாடு!

தேசிய கல்வி கொள்கை 2020 தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 2வது அகில இந்திய மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

அறிவாலயத்தில் அறிமுக கூட்டம்!

திமுக இளைஞரணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

சட்டமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டம்!

விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டமன்றத்தை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கடலூர் பேருந்துகள் இயக்கம்!

என்.எல்.சி-க்கு எதிரான போராட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கடலூரில் இன்று காலை முதல் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

சர்வதேச புலிகள் தினம்!

வனத்தின் காவலன் என்று அழைக்கப்படும் புலிகளை பாதுகாக்க ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதியான இன்று சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 434வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2வது ஒரு நாள் போட்டி!

இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை (ஆடி ஸ்பெஷல்)

டிஜிட்டல் திண்ணை: அன்புமணி மூலம் அமித்ஷாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel