செந்தில் பாலாஜி வழக்கு!
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.
ஆசிரியர் சங்கம் பேச்சுவார்த்தை!
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதையேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மணற்கேணி செயலி அறிமுகம்!
நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் பாடங்கள் கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு இன்று அறிமுகப்படுத்துகிறது.
திருப்பதி தரிசன டிக்கெட்!
திருப்பதியில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழை பெய்யும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சார்பதிவாளர் சொத்து அறிக்கை!
சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் அனைவரும் சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
கோட்டை மாரியம்மன் திருவிழா!
சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 430-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆஸ்திரியா, ஸ்காட்லாந்து மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: ஔவையார் கொழுக்கட்டை (ஆடி ஸ்பெஷல்)
முதலமைச்சர் கோப்பை: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற சென்னை அணி!