கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தருமபுரி மாவட்டம் தொப்பூரில் துவங்கி வைக்கிறார்.
ராஜ்யசபா தேர்தல்!
கோவா, குஜராத், மேற்குவங்க மாநிலத்தில் 10 ராஜ்ய சபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஜி20 மாநாடு!
பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக ஜி20 மாநாடு இன்று முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
ஆர்.என்.ரவி கன்னியாகுமரி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி செல்கிறார்.
மணிப்பூர் விவகாரம் போராட்டம்!
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் திமுக மகளிரணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜெயிலர் இசை வெளியீடு முன்பதிவு!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதி சீட்டுகளை இன்று மதியம் 1 மணி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மாஹே விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாஹேவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத்தேர்வு!
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
இலங்கை, பாகிஸ்தான் மோதல்!
இலங்கையில் இன்று நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: பானகம் (ஆடி ஸ்பெஷல்)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பைனலில் இந்தியா பரிதாப தோல்வி!