டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பணி நியமன ஆணை!

ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று (ஜூலை 22) வழங்குகிறார்.

அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு!

பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பனகல் மாளிகையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்!

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

சென்னை பள்ளிகள் இயங்கும்!

ஜூன் 19-ஆம் தேதி மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இன்று 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும்.

அண்ணாமலையார் கோவில் ஆடிப்பூரம் திருவிழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வித்தைக்காரன் டீசர் ரிலீஸ்!

வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 427-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு

“யார் அடிமை?” : ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *