டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ரணில் விக்ரமசிங்கே மோடியுடன் பேச்சுவார்த்தை!
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்று (ஜூலை 21) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ராகுல் மேல்முறையீட்டு மனு!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை!
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மணிப்பூர் கொடூரம் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூரில் குகி சமுதாய பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து சாஸ்திரி பவன் முன்பு இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
செங்கல்பட்டு உள்ளூர் விடுமுறை!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொலை திரைப்படம் ரிலீஸ்!
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 426-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்தகம் டீசர் ரிலீஸ்!
நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் நடிக்கும் மத்தகம் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகிறது.
டென்மார்க், அயர்லாந்து மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் டென்மார்க், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: வரகரிசி சொஜ்ஜி
1020 தியேட்டர்களில் ‘கொலை’ படம் வெளியாகிறது!