top ten news in tamil july 20 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

நாடாளுமன்ற கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை!

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

உம்மன் சாண்டி உடல் நல்லடக்கம்!

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் இன்று அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

விலைவாசி உயர்வு மற்றும் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது.

கங்குவா அப்டேட்!

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் Glimpse வீடியோ குறித்த அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 425-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜிஎம் பாடல் வெளியீடு!

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல்ஜிஎம் படத்தின் IskisKifa பாடல் இன்று வெளியாகிறது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட்!

இந்தியா, மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று துவங்குகிறது.

கிச்சன் கீர்த்தனா: பருப்பு ஊத்தப்பம்

ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0