எடப்பாடி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 19) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பாமக போராட்டம்!
மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
ரயில் சேவை!
கோவை மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை!
இன்று தொடங்கும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரம் – நேபாள் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன.
ஹிப் ஹாப் ஆதி படம் அப்டேட்!
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் கடைசி உலகப் போர் படத்தின் Glimpse வீடியோ இன்று வெளியாகிறது.
வேல் ரீ ரிலீஸ்!
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான வேல் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 124-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை புத்தக திருவிழா!
கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் ஜூலை 26 வரை புத்தக கண்காட்சி திருவிழா நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…