டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஜம்மு காஷ்மீர் வழக்கு விசாரணை!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (ஜூலை 11) விசாரிக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜிஎஸ்டி கவுன்சில் 50-வது கூட்டம்‌ டெல்லியில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது.

டெல்லி பள்ளிகள் விடுமுறை!

கனமழை காரணமாக டெல்லியில் உள்ள 5-ஆம் வகுப்பு பள்ளிகள் வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை!

வீரன் அழகு முத்துக்கோன் 266-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மரியாதை செலுத்துகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

செந்தில் பாலாஜி வழக்கு!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

திருப்பதி கோவில் பக்தர்கள் அனுமதி இல்லை!

ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

பாமக ஆர்ப்பாட்டம்!

பாமக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டில் இன்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 416-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் மோதல்!

வங்கதேசத்தில் இன்று நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா : கோதுமைப் புட்டு!

லியோ: விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0