சிறுதானிய உணவு திருவிழா!
சென்னையில் இன்று (ஜூலை 9) சிறுதானிய உணவு திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
அதிமுக மாநாடு கால்கோள் விழா
மதுரையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான கால்கோள் நடும் விழா இன்று நடைபெறுகிறது.
இலங்கை, நெதர்லாந்து மோதல்!
உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
தூத்துக்குடி சிறப்பு ரயில்!
தூத்துக்குடி பனிமயமாதா தங்கதேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் முன்பதிவு இன்று துவங்குகிறது.
திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்
திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமணவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைக்கிறார்.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 414-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் தேர்தல்!
உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பார்வையாளராக சென்றுள்ளார்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நமீபியா, உகாண்டா மோதல்!
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா, உகாண்டா அணிகள் இன்று மோதுகின்றன.
ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு: ’பர்போஸ்’ சஸ்பென்ஸ்!
1,000 ரூபாய்… 13 கேள்விகள்: விழிபிதுங்க வைக்கும் விண்ணப்பம்!