டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்!

கோவை மாவட்ட‌ திமுக செயற்குழு கூட்டம் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெறுகிறது.

குப்பையில்லா குமரி நடைபயணம்!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேரூராட்சியில் குப்பையில்லா குமரி என்ற தலைப்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

காவல்துறை குறைதீர் முகாம்!

சென்னை காவல்துறை சார்பில் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

வேளாண் வணிக திருவிழா!

சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வணிக திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

அநீதி பாடல்கள் வெளியீடு!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் அநீதி படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, மதுரை அணிகள் மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆனி பிரம்மோற்சவ விழா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 413-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ப்ரோ முதல் பாடல்!

சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த ப்ரோ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி

பிரதமர் தலையீடு: ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்ற கேப்டன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *