என்சிபி செயற்குழு கூட்டம்!
டெல்லியில் இன்று (ஜூலை 6) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு!
சட்டவிரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் இன்று வழக்கை விசாரிக்கிறார்.
பொன்முடி வழக்கில் தீர்ப்பு!
1996 முதல் 2001 வரை போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது சென்னை சைதாப்பேட்டையில் 3630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் எம்.பி, எம்.எல்.ஏ வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் தீர்ப்பு!
அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
போலி பாஸ்போர்ட் வழக்கு!
மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது போலி பாஸ்போர்ட் வழங்கியதாக அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட்!
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.
போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவாலா பாடல் வெளியீடு!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 411-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆயிரம் கோடி: ஐடி ரெய்டில் அதிரடி!
தென்காசி தொகுதி… மறு வாக்கு எண்ணிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு!