ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் கூட்டம்!
மக்களவை, மாநிலங்களவை, யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின்(ஜேபிசி ) முதல் கூட்டம் இன்று (ஜனவரி 8) நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை!
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாக கூடுகிறது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
புதிய இஸ்ரோ தலைவர்!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) தற்போது தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய. தலைவராக வி. நாராயணனை மத்திய நியமன குழு நியமித்துள்ளது. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஒடிசா ஆந்திராவில் மோடி பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவுக்கும் நாளை ஒடிசாவுக்கும் செல்ல உள்ளார். அப்போது, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மழை அப்டேட்!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.48க்கும் விற்பனையாகி வருகிறது.
டாக்சிக் ஃபர்ஸ்ட்லுக்!
கே ஜி எஃப் புகழ் யாஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
திமுகவினர் மீது வழக்குப்பதிவு!
ஆளுநர் ரவியை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், திமுக போராட்டத்துக்கு மட்டும் போலீஸ் எப்படி அனுமதி கொடுத்தது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுகவினர் 3,000 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குரூப் 4 – இலவசப் பயிற்சி !
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.
ஆளுநருக்கு அதிகாரம் – முதல்வர் எதிர்ப்பு!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சட்டப்போராட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ராபிக்கல் பொங்கல்!
திபெத்தை அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கம்… பயத்தில் நேபாளம்!
ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?
39 ஆண்டுகளாக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி… டாடா கொடுத்த ‘பஞ்ச்’